நம்முடைய சில முக்கியமான கோப்புகளை பாதுகாக்க பல முறைகளை கையாளுவோம். அந்த வகையில் ஏதேனும் ஒரு போட்டோவின் பின்புறத்தில் நம்முடைய கோப்புகளை மறைத்து வைக்கலாம்.சாதரணமாக அந்த கோப்புகளை ஓபன் செய்தால் போட்டோ மட்டுமே தெரியும். அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் கோப்புகள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள கோப்புகளை பார்க்க முடியும்.
1. இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகளை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.
2. அடுத்து கீழே உள்ள தரவிறக்க சுட்டியை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கி கொள்ளுங்கள்.
3. இந்த மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. தரவிறக்கம் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.
4. அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
5. அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6. Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg கோப்பை தேர்வு செய்து இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே கோப்பை கூட தேர்வு செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.
7. இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.
8. அந்த OK பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோப்புகள் மறைக்கப்பட்டது என செய்தி வரும். அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் கோப்பை சாதரணமாக ஓபன் செய்து பாருங்கள்.
9. வெறும் படம் மட்டுமே தெரியும். பின்னால் இருக்கும் நம் கோப்புகள் யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் கோப்புகள் தெரியும். அதை நாம் உபயோகித்து கொள்ளலாம்.
10. இது போல் நம் கோப்புகளை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராமல் நம் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி |