• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 17, 2011

    மறக்கப்பட்ட அழகு சாதனம்!

    Modern girls doesn't prefer traditional nose studs and henna - Beauty Care and Tips in Tamil
    அழகை விரும்பாத இளம்பெண்கள் யாருமே கிடையாது. அந்த அழகை பெற பியூட்டி பார்லர்களுக்கு படையெடுக்கும் பெண்கள் ஏராளம். இன்னும் சிலரோ, வீட்டுக்குள்ளேயே மினி பியூட்டி பார்லரை ஏற்படுத்தி, தங்களை தினமும் அலங்கரித்துக் கொள்கிறார்கள். காரணம் கேட்டால், "இந்த வயதில் அழகை ஆராதிக்காமல் ஐம்பது வயதிலா ஆராதிக்க முடியும்?" என்று கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான்! பெண்களின் இந்த மனசைப் புரிந்து கொண்டதால்தானோ என்னவோ, நம் முன்னோர்கள் ஆரோக்கியமான அழகுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால், நாம் தான் அதை சரியாகப் பின்பற்றுவதில்லை.
    கையில் மருதாணி இட்டுக்கொள்வது தமிழகப் பெண்கள் இடையே காலம் காலமாகவே இருந்து வருகிறது. இப்போது பலர் மருதாணிக்குப் பதிலாக நெயில் பாலீஷுக்கு மாறிவிட்டார்கள். அந்த நெயில் பாலீஷ் அவ்வப்போது நகத்தில் இருந்து உரிந்து விழ, சாப்பிடும்போது அப்படியே வயிற்றுக்குள் போய் ஒரு வழி பண்ணிவிடுகிறது.
    ஆனால், மருதாணி வைத்துக்கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகளே கிடையாது.
    நகங்களின் இடுக்கில் அழுக்கு சேர்வது தவிர்க்க முடியாத ஒன்று. நகத்தை வளர விடாமல் ஒட்ட நறுக்கி வந்தால்தான் அதைத் தவிர்க்க முடியும். இன்றைய 'பரபர' வாழ்க்கை முறையில் பலர் நகம் வெட்டுவதற்குக்கூட நேரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
    மருதாணி வைத்துக்கொண்டால் நகங்களின் இடுக்கில் சேர்ந்திருக்கும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அது அழித்துவிடும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் சக்தியும் இந்த மருதாணிக்கு உண்டு.
    இதுதவிர, தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்பவர்களை நெருங்குவது கடினம். சொறி-சிரங்கு போன்ற பிரச்சினைகளும் வராது.
    மருதாணிபோல், அந்த காலத்தில் தமிழ் பெண்கள் இடையே மூக்குத்தி அணியும் வழக்கம் அதிகமாக இருந்தது. இன்றும்கூட சில கிராமங்களில் மூக்குத்தி அணிந்துள்ள பெண்களைப் பார்க்கலாம். ஆனால், இன்றுள்ள மாடர்ன் மங்கைகளோ மூக்குத்தியை மறந்தே போய்விட்டார்கள்.
    "காதில் ஓட்டைப்போட்டு கம்மல் போட்டு அலங்கரித்துக் கொள்கிறோம். இதுவே ரொம்பவும் அழகாக இருக்கும்போது, ஏன் மூக்கிலும் ஓட்டைப்போட்டு முக அழகை கெடுத்துக்கொள்ள வேண்டும்?" என்ற அவர்களது எண்ணம்தான் அதற்கு காரணம்.
    உண்மையைச் சொல்லப்போனால், மூக்குத்தி அணிந்தாலே தனி அழகுதான். மேலும், அது அணிந்துகொள்வதில் நன்மையும் இருக்கிறது.
    பொதுவாக ஆண்களை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு பவர் அதிகம். மூக்குத்தி அணிந்துகொண்டால், அது அவர்களது மூச்சுக்காற்றை சீராக வெளியேற்றும். அத்துடன், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
    இன்று சிலர் கடைகளில் கிடைக்கும் மூக்குத்தி போன்ற டப்சை வாங்கி மூக்கில் தேவையானபோது மாட்டிக் கொள்கிறார்கள். அதனால் எந்த பயனும் கிடையாது.
    மூக்குத்தி அணிந்துகொள்ள பிடித்திருந்தால் அணிந்து கொள்ளுங்கள். அதில், ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறதே!