• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, February 16, 2011

    பெண்களின் கருமை நிறம் மறைய

    கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும்.மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளி படும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது.
    குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருந்தாலும் இன்றைய பெண்கள், சிலர் பார்லர்களில் லேசர் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
    ஏனென்றால் இது தாய் சேய் உடல் நலனை பாதிக்கும் தன்மை கொண்டது.இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதை தேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்' செய்யுங்கள்.
    இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதடுகள் படிப்படியாக சிவப்பாக மாறும்