• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, February 13, 2011

    கண்களைப் பாதுகாக்க

    நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவிப் போன்று இயங்குகிறது.ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து மனதில் பதிவு செய்து பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. ஆகவே நமது கண்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியம். பின்வரும் பயிற்சிகளை மேற்கொள்வது மிகுந்த பலனை அளிக்கும்.
    1. கண் சுத்தம்: ஒரு குவளையில் நிரம்புமாறு சுத்தமான குடிக்கும் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்(நீர் சூடாகவோ, குளிர்ந்ததாகவோ இருத்தல் கூடாது) நன்கு முன்புறம் குனிந்து ஒரு கண்ணை(அழுத்தாமல்) குவளை நீரில் மூழ்க வைக்க வேண்டும்.
    இந்நிலையில் கண்களை பத்து முறை இமைக்க செய்ய வேண்டும். பின்பு புது நீரை குவளையில் நிரப்பி மற்ற கண்ணிற்கும் இதுபோல் செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு முதல் ஐந்து முறை செய்யலாம்.
    இவ்வாறு செய்வதன் மூலம், கண்களில் உள்ள தூசுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.கண்களை சுற்றி உள்ள சுருக்கம் மற்றும் கருவளையம் படிப்படியாக மறையும்.
    2. கண் பயிற்சி: இரண்டு அங்குல சதுரமுடைய பஞ்சு அல்லது மெல்லிய துணியை எடுத்துக் கொண்டு சாதாரணமாக தண்ணீரில் நனைத்து மூடிய கண் இமைகளின் மீது பரப்பிக் கொண்டு ஓய்வில் இருக்கவும், உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ, சாந்தி ஆசனத்திலோ இப்படி செய்யலாம்.
    10 நிமிடங்கள் இவ்வாறு செய்ய வேண்டும். ஜலதோஷம், ஆஸ்த்துமா, இருமல் போன்ற தொல்லைகள் உடையவர்கள் அதை சரி செய்த பிறகு பயிற்சிகள் செய்தால் பலன் கிடைக்கும்.
    இவ்வாறு செய்வதன் மூலம், கண்களுக்கு தேவையான தெம்புடன் கூடிய இதமான ஓய்வு கிடைக்கிறது. தேவையற்ற சூடு தணிகிறது. கண் தசைகள் மற்றும் நரம்புகளில் கழிவு இரத்தம் வெளியேறி புது இரத்தம் கிடைக்கிறது.
    கண் பார்வை பிரகாசம் அடைகிறது. இரத்த அழுத்தக் குறைபாடு சரியாகிறது. மற்றும் சில வியாதிகளுக்கும் இப்பயிற்சி மிக நல்லது.
    3. கண்களை மூடுதல்: இடது விரல்களின் மீது வலது கைவிரல்களைக் குறுக்காக வைக்கவும். பின் இரு உள்ளங்கைகளையும் சற்று குழியாக்கி கொள்ளவும். பின் மூடிய கண் இமைகளின் மேல் இவ்விரு குழிந்த உள்ளங்கையின் பகுதியை மெதுவாக பட்டும் படாதவாறு அழுத்தாமல் மிகவும் கவனமாக வைக்கவும். இந்த பயிற்சியை எந்த நேரமும், நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் செய்யலாம்.
    இதன் மூலம் கண் சோர்வு நீங்கும்.கண் பார்வை தெளிவு பெறும், கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
    4. கண்களை இமைத்தல்: நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், கோமுகாசனம் இவைகளில் ஒன்றில் உட்கார்ந்து செய்தால் கூடுதல் பலன்கிட்டும். இரு கண் இமைகளை 10 வினாடிகள் இறுக மூடிபின் நன்றாக கண்களை விரித்து திறக்க வேண்டும். இதே போல் 20 முதல் 25 முறை செய்தல் வேண்டும். பின் ஒவ்வொரு கண்ணிற்கும் தனியாக இமைத்தல் பயிற்சி செய்தல் வேண்டும். இவைகளை எந்த நேரமும் செய்யலாம்.
    இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும் கண்களை சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள கழிவுகள் வெளியேறி கண்கள்  புது வலிமை பெறுகின்றன.