• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, February 13, 2011

    ஆலமரத்தின் முக்கியத்துவம்!

     ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று சொல்வார்களே. பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட பெரிய மரங்களைத்தான் சொல்வார்கள். அதில் தழைப்பிற்கு உரிய மரம் ஆலமரம். தழைத்து ஓங்கி கிளை கோத்திரமாக வாழ்வது என்பது சொல்வார்களே.
    அதன்பிறகு, ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலடியாரும், திருக்குறளும் படித்தால் வாழ்க்கை சிறக்கும். ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் - கருவேல மரம் என்று தனியாக இருக்கிறது. அந்த கருவேல மரப்பட்டையில் அவ்வளவு விசேஷம் இருக்கிறது. அதனால் கருவேல மரக்குச்சியிலும், ஆலமரக்குச்சியிலும் பல் தேய்த்தால் ஈறுகள் வலுவடையும். பல் தேய்க்கும் போது கெட்ட பித்த நீர்களெல்லாம் உமிழ் நீரோடு கலந்து வெளியே வந்துவிடும். அதனால்தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொன்னது.
    அதுமட்டுமல்ல, மிகவும் புனிதமானது இந்த மரம். இந்துக்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், ஜைணர்கள் இந்த மூன்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் புனிதமான மரம். இதில் பல மகான்கள், சித்தர்களெல்லாம் அமர்ந்து தவநிலை அடைந்திருக்கிறார்கள். இந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தால் குளிர்சாதனத்தைவிட நன்றாக இருக்கும். அக்னி நட்சத்திரக் காலங்களில் கூட குளுகுளுவென்று இருக்கும். ஏனென்றால் அதனுடைய இலை அமைப்பில் அதிகமான குளோர·பில் அமைந்திருக்கிறது. பச்சையம் என்கிறோமே அது அதிகம். மேலும், சின்னதாக மெழுகுத் தன்மை அந்த இலையில் இருக்கும். அதனால் அது வெப்பம் அதிகமாகத் தாக்காத அளவிற்கு கட்டிக் காக்கிறது.
    சரியாகப் படிக்காத பிள்ளைகளை ஆலமரத்தின் கீழ் உட்காரவைத்து படிக்க வைத்துப் பாருங்கள், பிறகு சொல்லுங்கள். மக்கு என்று சொல்பவர்களைக் கூட, ஆலமரத்தின் கீழ் போய் உட்கார்ந்தாலே ஒரு சாத்வீகமான எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும். எமோஷக், டென்ஷன், இரத்த அழுத்தம் போன்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அவர்களுக்கே தெரியாமல் தலை முடியிலிருந்து கால் பாதம் வரை ஒரு மசாஜ் நடந்து கொண்டிருக்கும். அது அவர்களுக்குத் தெரியாது.
    மசாஜுக்குப் போனால் எப்படி உட்காருகிறோமே, அதே மாதிரி இங்கே சும்மா உட்கார வேண்டும். அப்படி உட்கார்ந்தால் தானாக மகிழ்ச்சி மலரும். அப்படியே படிப்படியாக டென்ஷன், எமோஷனெல்லாம் குறைவதை உணரலாம்.