![]() யூடியுப்-ல் வீடியோக்களை தேட பல வசதிகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் அன்றைய தின பழைய வீடியோக்களை தேட விரும்புபவர்களின் கடினத்தை குறைத்து எளிதாக அன்று முதல் இன்று வரை உள்ள அனைத்து வீடியோக்களையும் காட்ட ஒரு தளம் உள்ளது. இத்தளத்தின் பெயர் YTTM அதாவது YT என்பது யூடியுப்ஐயும், TM என்பது Time Machine என்பதையும் கொண்டு இந்தப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று Search என்ற கட்டத்திற்குள் எந்த வகையான வீடியோ வேண்டுமோ அதை தட்டச்சு செய்து விட்டு, அதற்கு அடுத்து இருக்கும் Time Machine Frameல் எந்த ஆண்டில் உள்ள வீடியோ தேட வேண்டுமோ அந்த ஆண்டையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தையும் தேர்ந்தெடுத்த ஆண்டில் வெளிவந்த வீடியோவும் காட்டப்படும். இணையதள முகவரி |