• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 17, 2011

    ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்

    தினமும் 75 கிராம் உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறைவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு 25 சதவீதம் குறையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.6 மாத காலத்திற்கு குறிப்பிட்ட அளவு உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்ததால் எல்.டி.எல் எனப்படும் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு 25 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
    எல்.டி.எல் எனப்படும் கொழுப்பானது உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி இதய நோயை உருவாக்கும். இத்தகைய கொழுப்பை கட்டுப்படுத்த ஆப்பிள் உதவுகிறது.
    ஆப்பிள்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் பாதிப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. ஆப்பிளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் சாப்பிடும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், எடை குறைகிறது.
    இந்த புதிய ஆய்வை கண்டுபிடித்த ப்ளோரிடா மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் டொக்டர் பக்ரம் அர்ஜ்மண்டி கூறுகையில்,"ஆப்பிள் சாப்பிடுவதால் கொழுப்பு பெருமளவு குறையும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று" என கூறினார்.