• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Saturday, April 23, 2011

    மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்: ஆய்வுத் தகவல்

    ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர்.மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியானவர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வேண்டும் என பெண்கள் கூறுகிறார்கள்.
    இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஆள்காட்டி விரலுக்கும், மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்புடையதாக உள்ளது.
    ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது, பெண்களுக்கு ஹோர்மோன் அதிக அளவில் தூண்டப்படுகிறது. இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு கூடுதல் அழகாக தெரிகிறார்கள்.
    இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் பெண்களை அது வெகுவாக கவர்கிறது என ஆய்வுத் தலைவர் டொக்டர் காமிலே பெர்டன்சி தெரிவித்தார்.