எடை கூடிய சிறுவர் சிறுமியருக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.எடை அதிகமாகவுள்ள மூன்று வயது குழந்தைகளுக்கு கூட எதிர்காலத்தில் இருதய நோய் தாக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
16000 சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அனேகமான எடை கூடிய குழந்தைகளுக்கு இருதயத்துடன் தொடர்புடை நோய்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த ஆய்வினை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இன்னமும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் மற்றுமொரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குழந்தைப் பருவம் முதல் ஆரோக்கியமான உடல் எடையைப் பேண வேண்டியது மிகவும் அவசியமானதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறு பராயம் முதலே ஆரோக்கியமான வாழ்க்கை முறைமைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சிறுவர்கள் உணர்த்த வேண்டுமென பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உரிய உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற் பயற்சிகளின் மூலம் உடல் எடைப் பிரச்சினைக்கு சுலபமாக தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது. |