வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை. மெல்போர்ன் பல்கலைக்கழக கூறியதாவது:
பற்சிதைவு, வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பிரபலமான பல மவுத்வாஷ்கள் உள்ளன. அவை பயன் அளித்தாலும், குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 9 மடங்கு வாய்ப்புள்ளது.
புகைபிடிப்பவர்களுக்கு இது பல மடங்கு புற்றுநோய் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவோருக்கு 5 மடங்கு அபாயம் உள்ளது. எனவே, மவுத்வாஷ்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆய்வில் கூறப்பட்டது.
இங்கிலாந்தின் நியூகேசில் பல்கலைக்கழக ஆய்வில், ‘ஆல்கஹால் உள்ள மவுத்வாஷ்களைப் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏற்படலாம். எனவே, அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க நோயாளிகளுக்கு பல் டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆல்ஹலால் கொண்ட மவுத்வாஷ்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் மட்டுமின்றி வாயில் எரிச்சல் உணர்வு, வறட்டுத்தன்மை, வலி ஆகியவையும் ஏற்படலாம். மவுத்வாஷில் ஆல்கஹால் சேர்ப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர வேண்டும் என்றும் ஆய்வில் கூறப்பட்டது. |