• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 17, 2011

    வயர்லெஸ் ஸ்பீக்கருடன் மொபைல்

    ஏதாவது புதுமையான பயன்பாடு, மொபைல் போனுடன் நமக்குக் கிடைத்துக் கொண்டே உள்ளது. அந்த வரிசையில், மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் அதிகம் பேசப்படாத, விண்காம் (Wyncomm) நிறுவனம், அண்மையில் வயர்லெஸ் ஸ்பீக்கர் இணைந்த மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

    விண்காம் நிறுவன மொபைல்கள், குறைந்தவிலை மொபைல் சந்தையில் தான் தன் மாடல்களை வடிவமைத்து அறிமுகப்படுத்தும். அந்த வகையில் Y36 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் போனின் அதிக பட்ச குறியீட்டு விலை ரூ. 3,095.
    இது ஒரு இரண்டு ஜி.எஸ்.எம் .சிம் இயக்க போன். 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1000 mAh திறன் கொண்டது. A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம், நெட்வொர்க்கிற்குத் துணை புரிகின்றன. இந்தி மொழியையும் இது சப்போர்ட் செய்கிறது. இதனுடன் தரப்படும் வயர்லெஸ் ஸ்பீக்கரை 3 முதல் 5 மீட்டர் வரையிலான தொலைவில் வைத்து இயக்கலாம். இதனால் சரவுண்ட் சவுண்ட் வைத்து இசையை ரசிக்கும் ரசிகர்கள் இதனை விரும்புவார்கள்