• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 17, 2011

    உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயகம் "ஆப்பிரிக்கா"

    உலகில் வாழும் மக்கள் ஆயிரக்கணக்கான மொழிகளை பேசுகின்றனர். தொடக்கத்தில் அவை எந்த மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    இதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளி, இந்தி, ஜப்பானிஷ் உள்ளிட்ட 500 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொதுவாக 1 1/2 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றினான் என்ற கருத்து உள்ளது.
    அந்த மனிதன் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென தனியான மொழியை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பறிமாற்றிக் கொண்டான். அங்கிருந்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறினான்.
    இதை வைத்து பார்க்கும் போது தற்போது உலகில் உள்ள மொழிகளின் தாயகமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் ஒரே மொழியில் இருந்து தான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.