இவர்கள் அனைவருக்கும் உதவிடும் பொருட்டு, ஆர்.ஐ.எம். நிறுவனம் தன் பிளாக்பெரி கர்வ் 8250 மொபைல் போனின் விலையைக் குறைத்துள்ளது. இதன் தற்போதைய அதிக பட்ச விலை ரூ.9,990.
இதன் மற்ற சிறப்புகள்:
முழு குவெர்ட்டி கீ போர்டு, 2.46 அங்குல 320 து 240 பிக்ஸெல் அளவுகளில் வண்ணத்திரை, 512MHz வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 2 எம்.பி. கேமரா, ஆப்டிகல் ட்ரேக் பேட் நேவிகேஷன், EDGE, GPRS தொழில் நுட்ப உதவி, வை-பி, 1150 ட்அட திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி ஆகியவற்றுடன் வழக்கமான பிளாக் பெரி வசதிகள் இதில் கிடைக்கின்றன. இது ஒரு 3ஜி போன் இல்லை என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும்.