![]() குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர வேண்டுமென்றால் அந்த முழு வீடியோவையும் தரவிறக்கம் செய்து பின்னர் சில மென்பொருள் உதவியோடு அந்த பகுதியை மட்டும் கட் செய்து பின்னர் மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இந்த முறையில் நம்முடைய நேரம் வீணாக விரயமாகிறது. நமக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் இப்படி நேரத்தை செலவழிக்க யாரும் விரும்புவதில்லை. ஆகையால் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இந்த பிரச்சினைகளை தீர்க்கவே ஒரு அருமையான தளம் நமக்கு உதவி செய்கிறது. 1. முதலில் இந்த லிங்கை snipsnip.it க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். 2. கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் URL கொடுத்து உங்கள் கீபோர்டின் என்ட்டர் கீயை அழுத்தவும். 3. உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் பகுதியின் START TIME மற்றும் வீடியோவின் END TIME நிமிடம் மற்றும் நேரத்துடன் சரியாக கொடுத்து கீழே உள்ள SNIP IT என்ற பட்டனை அழுத்தவும். 4. அடுத்து உங்கள் வீடியோ ரெடியாகி விடும். அதில் அந்த வீடியோவிற்கான EMBED URL கொடுக்கப்படும். அதை முழுவதும் கொப்பி செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். (நீங்கள் உருவாக்கிய வீடியோவின் PREVIEW பார்க்கவும் முடியும்). |