• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 17, 2011

    எல்.ஜி.யின் புதிய மொபைல்

    எல்.ஜி. ட்டி 310 என்ற பெயரில், பார்டைப் மாடலாக, புதிய மொபைல் போன் ஒன்றினை எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
    இதன் எடை 86.5 கிராம். கைக்கு அடக்கமாக இதன் பரிமாணம் 102.9 து 56.9 து 11.9மிமீ என்ற வகையில் உள்ளது. நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இது இயங்குகிறது. 2.8 அங்குல அகலத்தில் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப் பட்டுள்ளது. எம்.பி.3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பிப் பெறும் வசதி, இன்ஸ்டன்ட் மெசஞ்சர், A2DP இணைந்த புளுடூத், வை-பி, ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த போனில் ஒரு சிம் மட்டுமே இயக்க முடியும்.
    இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 5,577