![]() இந்தத் தளங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் நீங்கள் பணம் கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும், இல்லை இலவசமாக என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிறக்கம் ஆகும். இது மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிறக்கவும் நமக்கு ஒரு தளம் உதவுகிறது. இத்தளம் பார்ப்பதற்கு மட்டுமல்ல இதன் சேவையும் எளிதாகவும் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. இத்தளத்திற்கு இடது பக்கம் இருக்கும் Read more என்பதை சொடுக்கி நாம் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்ற இரண்டையும் கொடுத்து ஒரு புதிய பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அடுத்ததாக Select Files என்ற பொத்தானை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்புகளை குறிப்பிட வேண்டும். பதிவேற்றிய பின் கிடைக்கும் இணையதள முகவரியை சேமித்து யாருக்கு இந்த கோப்பை அனுப்ப வேண்டுமோ அவருக்கு இந்த முகவரியை அனுப்பினால் போதும். அவர் இந்த முகவரியை சொடுக்கி எளிதாக நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை தரவிறக்கலாம். இணையதள முகவரி |