• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Friday, April 29, 2011

    நம் நண்பர்களின் புகைப்படங்களை அழகுப்படுத்த

    பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை இணைத்து அழகான சித்திர வேலைப்பாடு அமைந்தது போல் அழகான புகைப்படமாக உருவாக்கலாம்.இன்றைய சுழலில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் நாம் பயன்படுத்தும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் மைபேஸ் போன்ற சமூக தளங்களில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை கொண்டு ஒரு அழகான வேலைப்பாடு மிக்க சித்திரமாக உருவாக்கலாம்.
    இத்தளத்திற்கு சென்று நாம் எந்த சமூக வலைத்தளங்களில் நமக்கு நண்பர்கள் அதிகம் இருக்கிறார்களோ அதை தேர்ந்தெடுத்து Login செய்தால் மட்டும் போதும். அடுத்து வரும் திரையில் நம் அனைத்து நண்பர்களின் புகைப்படமும் சேர்ந்து நம் புகைப்படம் Background ஆக உள்ளபடி அழகான சித்திர வேலைப்பாடுடன் கூடிய படமாக நமக்கு தெரியும்.
    இந்த படத்தை சொடுக்கி நம் கணணியில் சேமித்து வைக்கலாம். நம் வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இதை பிரிண்ட் செய்து வாங்க விருப்பம் உள்ளவர்களும் 14 டொலர் பணம் செலுத்தி Poster ஆகவும் வாங்கலாம்.
    இணையதள முகவரி