• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, April 27, 2011

    பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்புகள்

    இந்திய அரசின் அணு சக்தித் துறையின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூட் பார் பிளாஸ்மா ரிசர்ச் நிறுவனம் எதிர்கால தேவைக்காக பிளாஸ்மா பிசிக்ஸின் அடிப்படையில் தெர்மோ நியூக்ளியர் பியூஷன் முறையில் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    இந்திய தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் எரிசக்தி தேவைகளையும் பிளாஸ்மா ரிசர்ச் அடிப்படையில் உருவாக்குவதில் ஐ.பி.ஆர்., நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
    இந்த நிறுவனத்தில் ஆர்வமிக்க இளம் இயற்பியலாளர்கள் மற்றும் பொறியாளர்களை ஈடுபடுத்தி ஆய்வுகளை செய்வதற்கான டெக்னிகல் டிரெய்னிங் புரொகிராமிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சி முடிந்த பின் ஐ.டி.இ.ஆர்., -இந்தியா புராஜெக்ட்களில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    வயது என்ன: பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தின் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.09.1985க்குப் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
    தகுதி என்ன: இன்ஸ்டியூட் பார் பிளாஸ்மா ரிசர்ச் நிறுவனத்தின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பின் வரும் ஆறு பிரிவுகளில் ஏதாவது ஒரு கல்வித் தகுதி தேவைப்படும் : இயற்பியல் புலத்திற்கு விண்ணப்பிக்க பிசிக்ஸ் அல்லது அப்ளைடு பிசிக்சில் எம்.எஸ்.சி., அல்லது பி.எஸ்.சி., பிசிக்ஸ் படிப்பிற்குப் பின் எம்.டெக்., இண்டக் ரேட்டட் எம்.எஸ்.சி., பி.இ.,பி.டெக்., படிப்பில் இன்ஜினியரிங் பிசிக்ஸ் போன்ற கல்வித் தகுதி தேவைப்படும். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கெமிக்கல், மெட்டலர்ஜி, மெட்டீரியல் சயின்ஸ் என்ற இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., (இன்ஜினியரிங்) போன்ற படிப்பை பிளஸ் 2விற்குப் பின் குறைந்த பட்சம் 4 ஆண்டுகளாவது படித்திருக்க வேண்டும். எம்.எஸ்.சி., மெட்டீரியல் சயின்ஸ் படித்தவர்கள் கடைசிப் பிரிவிற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.
    பணி எப்படி இருக்கும்: ஐ.பி.ஆர்., பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் கட்டாயம் ரெசிடென்சியல் டிரெய்னிங்கை மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.16 ஆயிரம் ஸ்டைபண்டாகவும், புத்தகங்களை வாங்குவதற்காக ஒரு முறை தரப்படும் ரூ.10 ஆயிரமும் கிடைக்கும். பயிற்சி வகுப்புகளில் லெக்சர், லேபரட்டரி, புராஜக்ட் போன்ற வகைகளில் பயிற்சி தரப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஐ.பி.ஆர்., அல்லது ஐ.டி.இ.ஆர்.,- இந்தியா அமைப்பில் சயிண்டிஸ்டாக பணியில் அமரலாம்.
    தேர்ச்சி முறை: இந்தப் பயிற்சிக்கு வரும் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதி உடையவர் களுக்கு மட்டும் எழுத்துத் தேர்விற்கான அழைப்பு அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு 29.05.2011 அன்று தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட 8 மையங்களில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் காந்தி நகரில் வைத்து நேர்காணல் நடத்தப்படும். இதிலும் வெற்றி பெறுபவர்களே ஐ.பி.ஆர்., நிறுவனத்தில் டிரெய்னியாக இணைய முடியும். முழுமையான விபரங்களுக்கு இந்த அமைப்பின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
    விண்ணப்பிப்பது எப்படி: பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முன் முதலில் இந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று முழு விபரங்களையும் படித்து அறியவும். இதன் பின்னர் ரூ.100/-க்கான டி.டி.,ஐ "Institute for Plasma Research" என்ற பெயரில் ஆமதாபாத்தில் மாற்றத்தக்கதாக எடுக்கவும். இந்த டி.டி.,யின் விபரங்களுடன் இணைய தளத்திற்கு சென்று ஆன்-லைன் முறையில் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை போதுமான காப்பிகள் எடுத்துக் கொள்ளவும். ஒரு பிரிண்ட் அவுட்டில் உங்கள் சமீபத்திய கலர் புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு பின் வரும் முகவரிக்கு 02.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
    இந்த விண்ணப்பத்துடன் கையொப்பமிட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். இதன் பின்னர் அனைத்து தகவல்களும் உங்களின் இ-மெயில் மூலமாகவே அனுப்பப்படும் என்பதால் உங்களுக்கான உபயோகத்திலுள்ள பிரத்யேக இ-மெயில் முகவரி இருப்பதையும் உறுதி செய்யவும்.
    முகவரி:
    Chairman,
    Academic Committee,
    INSTITUTE FOR PLASMA RESEARCH,
    Near Indira Bridge, BHAT,
    Gandhinagar 382428
    GUJARAT.
    விண்ணப்பிக்க இறுதி நாள் : 02.05.2011
    இணைய தள முகவரி : http://www.iprttp.org.in/