• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    மக்கள் கவனத்தை ஈர்க்கும் புளி சாகுபடி

    புளியமரம் நம் நாட்டில் தொன்மையான மரங்களுள் ஒன்று. எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் மண் வகைகளையும் தாங்கி வளரும்.
    பெரும்பாலும் வனப்பகுதிகளிலும் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் மட்டுமே இதுவரை வளர்க்கப்பட்டு வந்த இம்மரப்பயிர் தற்போதைய மிகுதியான தேவையால் நல்ல விளைச்சல் நிலங்களிலும் தீவிர சாகுபடியில் முறையில் பயிர் செய்யப்படுகிறது. உணவு சமைப்பதில் முக்கிய இடத்தை பெற்றுள்ள புளி டார்டாரிக் அமிலம் செய்வதற்கும் உபயோகமாகின்றது. புளியங்கொட்டைகளை கொடுத்து அதனை விற்பதின் மூலம் வருமானத்தையும் ஈட்டித்தருகின்றது. கொட்டைகளை பொடியாக்கி கோந்துடன் சேர்த்து கொதிக்க வைத்தால் வலுவான கோந்த் என்பார்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதுபோல் புளிய மரம் உயிரோடு இருந்தால் புளி மூலம் வருமானத்தை தருகின்றது. அதை வெட்டி விறகாக விற்றால் சுமார் 17 டன் விறகு கிடைக்கும்.
    புளியை சாகுபடி செய்பவர்களிடம் வியாபாரிகள் குத்தகைக்கு மரங்களை எடுக்க ஓடோடி வருவார்கள். விதையில் முளைத்த கன்றினை நட்டபோது அது பலன்தர பல வருடங்கள் பிடிக்கின்றன. தற்போது புளி சாகுடியில் ஒட்டுக்கலை வெற்றி தந்துள்ளது. விவசாயிகள் ஒட்டுக்கன்றுகளை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முன்வந்துள்ளனர். இந்த கன்றுகள் தாய் மரத்தின் குணங்களை அப்படியே கொண்டிருப்பதுடன் கடுவிரைவில் அதாவது நட்ட மூன்றாவது ஆண்டிலிருந்தே காய்க்கத் துவங்கிவிடுகின்றன. தற்போது விவசாயிகளுக்கு உதவிவரும் ஒட்டுக்கன்று பி.கே.எம்.1 ஒட்டு ரகமாகும். இந்த ரகம் வறட்சியைத் தாங்குவதுடன் அதிக புளி மகசூலினைத் தருகின்றது. இதில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்ப்பதோடு, நார்த்தன்மை குறைவாகவும், சுவையான சதை 39 சதவீதமாகவும் உள்ளது. நன்கு வளர்ந்து காய்த்து குலுங்கும் (சுமார் 13 ஆண்டு மரம்) மரத்தில் மரம் ஒன்றில் 500 கிலோ மகசூல் கிட்டுகின்றது. புளி விலை கிலோ 100 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. பி.கே.எம்.1 ரக புளி வறட்சி மிகுந்த திண்டுக்கல், தர்மபுரி, சிவகங்கை போன்ற பகுதிகளிலும் தமிழகத்தில் இதர பகுதிகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. ஒட்டுக்கன்றுகள் (பி.கே.எம்.1) திண்டிவனம் தாலுகாவை சேர்ந்த வறட்சிப் பகுதியில் தோட்டக்கலை வல்லுனர் ஆர்.ராம்குமார், (பாலப்பட்டு, ஜி.எஸ்.டி.ரோடு, பாலப்பட்டு-604 302, விழுப்புரம் மாவட்டம்) தயார் செய்ததை விவசாயிகளுக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார். சிவகங்கையைச் சுற்றி தரிசு நிலங்களில் பி.கே.எம்.1 என்ற ரகத்தை நட்டு புரட்சி கண்டு வரப்படுகின்றது. இப்பகுதிகளில் நட்ட மூன்று வருடங்களிலேயே மகசூல் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ரகம் இப்பகுதிகளில் பலவித பலன்களைத் தருகின்றன.
    1. உணவுப் பொருட்களில் சுவை சேர்க்கப்படுகிறது. 2. பழங்களில் டார்டாரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. 3. கொட்டைகளை அரைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுப்புளியை நடவு செய்ய ஆனி மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை (ஜூலை - நவம்பர்) ஏற்ற பருவமாகும். இந்த ரகத்தின் கன்றுகளை 10மீ து 10மீ இடைவெளியில் நடவு செய்யலாம். ஒரு ஏக்கரில் 40 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கலாம். தகுந்த தொழில்நுட்பத்தை அனுசரித்து ஏக்கரில் 160 கன்றுகள் நடலாம். இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரினை சிறிதும் வீணாக்காமல் சொட்டுநீர் பாசனம் கொடுத்து செடிகள் பராமரிக்கப்படுகின்றது. இக்கன்றுகளை நடுவதற்கு 2 அடி து 2 அடி து 2 அடி அளவு உள்ள குழிகளை எடுத்து ஒரு மாதத்திற்கு உலரவிட்டு மேல் மண்ணுடன் தொழு உரத்தை கலந்து செடிகள் நடப்பட்டு வருகின்றன. இது சமயம் இயற்கை உரங்கள் மட்டும் இடப்படுகின்றது. ரசாயன உரங்கள் இடப்படுவதில்லை. ஒட்டுச்செடிகளை நடவு செய்யும்போது ஒட்டுப்பகுதியை தரையிலிருந்து சுமார் 2 அங்குலம் மேலாக இருக்குமாறு நடவு செய்யப்படுகிறது. காற்றினால் ஒட்டுப்பகுதி உடைந்துவிடாமல் இருக்க குச்சி நட்டு, தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படுகின்றது. கன்றினை நட்ட பிறகு அது நல்ல வளர்ச்சியை அடையும்வரை அந்த கன்றுக்கு சரியான இடைவெளியில் நீர்பாசனம் செய்து வரவேண்டும். செதில் பூச்சி மற்றும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த 1% மானோகுரோட்டோபாஸ் காய்க்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். சாம்பல் நோயினைக் கட்டுப்படுத்த 0.1% கராத்தேன் தெளிக்க வேண்டும். நடவு செய்து மூன்று வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதங்களில் புளி அறுவடைக்கு தயாராகிவிடும். விவசாயிகள் உரிகம் என்ற புளி ரகத்தையும் தும்கூர் ரகத்தையும் தேர்வு செய்யலாம். இவைகளில் தரமான புளி கிடைக்கும்.
    -எஸ்.எஸ்.நாகராஜன்.