கடந்த 13 ஆண்டுகளாக, தொழில் முறை கதை சொல்லியாக இருக்கும் ஜீவா: எங்களுடையது கூட்டுக் குடும்பம்.
சின்ன வயதில் இருந்தே அம்மா, பாட்டி என்று பலரிடமும் கதை கேட்டு வளர்ந்தேன்.அந்த கதைகள், எனக்குள் அப்படியே பதிந்து விட்டன. படித்து முடித்தவுடன், கொஞ்ச நாள் ஆசிரியராக வேலை பார்த்தேன்.எங்க வீட்டில், எங்க அண்ணன் பசங்க, அக்கா பசங்களுக்கு கதை சொல்வேன். அதை அவர்கள் சுவாரஸ்யமாக கேட்டு, ரசிப்பாங்க. கதை சொல்லும் போது, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது என் சுபாவம்.சென்னையிலுள்ள, "துலிகா' பதிப்பகத்தின் உரிமையாளர் ராதிகா, என் தோழி. ஒருமுறை, அங்கு நடந்த புத்தக கண்காட்சிக்கு வந்த குழந்தைகளுக்கு, கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.கதை சொல்வதில், எனக்குள்ள ஆர்வத்தை பார்த்து, சனிக்கிழமைகளில் குழந்தைகளை வரவழைத்து, அவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தினார். அப்படி ஆரம்பித்தது தான், தொழில் முறை கதை சொல்லி.ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் கதை சொல்லி வருகிறேன். குழந்தைகளுக்கு கதை சொல்வதாக இருந்தால், தன்னம்பிக்கையூட்டும் கதைகளாக தான் சொல்வேன். பெரும்பாலும், சிரிக்க வைக்கும் கதைகளாகவே அவை இருக்கும்.கதை கேட்கும் போது, குழந்தைகளின் கற்பனை வளம் அதிகரிக்கும். இதனால், அவர்களின் வலப்பக்க மூளையின் செயல்திறன் தூண்டப்படுகிறது. மேலும், கதை கேட்டு வளரும் குழந்தைகள், தங்களை தாங்களே மதிக்க கற்று கொள்கின்றனர்.பெரியவர்களை பொறுத்தவரை, கதை கேட்பது, அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்.