• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    எம்பிராய்டரி பழக இரு வாரம் போதுமே

    கண் மூடி கண் திறப்பதற்குள் கட...கட... ஓசையுடன், சேலையில் எம்பிராய்டரி பூவை தைத்து முடித்து அசத்துகிறார், மதுரை விருதுநகர், கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி.
    ஆறாண்டுகளாக மெஷின்
    எம்பிராய்டரி மற்றும் கைத்தையல் எம்பிராய்டரி கற்றுத் தருகிறார். விருதுநகரில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொழிலை செய்கின்றனர்.
    விழாக்காலங்களில் மொத்தமாக துணிகள் எடுத்து இதில் எம்ராய்டரிங் செய்து விற்பனை செய்கிறார். மற்ற நாட்களில் வாடிக்கையாளர்களின் வருகையை பொறுத்து எம்ராய்டரிங் செய்யலாம். மெஷினில் 15 நாட்களில் பழகலாம். கைத்தையல் எம்ராய்டரிங் கற்க, குறைந்தது இரண்டு மாதங்களாகும். சேலை, ஜாக்கெட், சுரிதார், பட்டுப் பாவாடை, சட்டையில் எம்ராய்டரிங் செய்வதற்கு 200 முதல் 5000 வரை ரூபாய் கட்டணம் வாங்கலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுதுபோக்குடன், வருமானமும் கிடைக்கும். கற்றுக் கொள்ள ஆசையா... 90474- 24909 க்கு ஹலோ சொல்லலாம்