• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    நவீன தொழில்நுட்பம்

    முருங்கைத் தேனை கொடுக்கும் அன்னை தேனீ பண்ணையின் அடுத்த புதுமை தும்பை மற்றும் துளசித்தேன்: தேன் சேகரிப்பில் இன்று பலர் ஈடுபட்டு வந்தபோதும் அன்னை தண்டாயுதபாணி தனக்கென்று ஒரு தனி வழி அமைத்து செயல்படுபவர்.
    தேன் என்றால் பலவிதமான மலர்களிலிருந்து சேர்க்கப்படுவது என்பதை மாற்றி மருத்துவ குணம் நிறைந்த சிறந்த ஒரு குறிப்பிட்ட பூவிலிருந்து சேகரித்து தேனை சந்தைப்படுத்துபவர். கரூர்-அரவக்குறிச்சியில் ஏராளமாக நிறைந்திருக்கும் முருங்கைத் தோட்டங்களிலிருந்து இவர் சேகரித்த முருங்கைத்தேன் விளம்பரமானது. ரசாயன கலப்பு என்றாலே எதுவென்று தெரியாத, முழுக்க முழுக்க இயற்கையாக முளைத்த மருத்துவ குணங்கள் நிரம்பிய தும்பை மற்றும் காட்டுத்துளசி செடிகளிலிருந்து தேனை சேகரிக்கிறார்.
    தமிழகத்தில் தேன் சேகரிப்போரில் பலர் கேரள பகுதிகளில்தான் அதிகமான தேன் சேகரிக்கிறார்கள். அங்கு சேகரிக்கப் படும் தேன் பெரும்பாலும் ரப்பர் தேன்தான். ரப்பர் தேன் இந்த தேனைக் காட்டிலும் சுவை, நிறம், மருத்துவ குணம் ஆகியவை வித்தியாசமானதாகத்தான் இருக்கும். அதனால்தான் இவர் வித்தியாசமான தேன் வகைகளைத் தயாரிக்கிறார். மேலும் தகவல்களுக்கு: நி.தண்டாயுதபாணி, 21, நடராஜ நாயக்கர் தெரு, சோழிங்கநல்லூர், சென்னை-600 119. 90030 54725.
    அன்னை தேனீ பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த முருங்கைத்தேன், தும்பைத்தேன், துளசித்தேன் விற்பனைக்கு உள்ளன. இங்கு இத்தாலிய தேனீப்பெட்டிகள் குறைந்த விலையில் கிடைக்கும். தரமான தேன் பிரித்தெடுக்கும் கருவி யையும் வாங்கலாம். கலப்படமற்ற தேன் மட்டுமே விற்பனை என்பதால் உற்பத்தியாக உள்ள பண்ணை தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    முதல் ஸ்பைசஸ் பார்க்: கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் புத்தடியில் துவக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கம்ப்யூட்டர் மூலமாக ஏலம் கேட்க முடியும். இயந்திரங்கள் மூலமாக இளம்பச்சை, பெருவெட்டு, இளம் பச்சை நடுத்தரம், குறைவான பச்சை, சன்னரகம் என்று ஏலக்காய் தரம் பிரிக்கப்படுகிறது. 50 கிராமிலிருந்து 60 கிலோ வரை எடைபோட்டு பேக்கிங் செய்யும் வசதியும் ஏலக்காய் பொடி தயாரிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்துடன் வெள்ளை மிளகு தயாரிக்கும் நீராவி இயந்திரமும் இணைக்கப்பட்டுள்ளது.
    சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிந்துகொள்ளும் விதமாக இன்டர் நெட் வசதியும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. நல்ல விலை கிடைக்கும்வரை ஏலக்காய் இருப்பு வைப்பதற்கு குளிர்பதன கிட்டங்கியும் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு சேமித்து வைத்தபின் தரப்படும் ரசீதின் அடிப்படையில் இந்த ஸ்பைசஸ் பார்க்கில் அமைக்கப் பட்டுள்ள யூனியன் வங்கி விவசாயிகளுக்கு கடனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்