• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Friday, April 29, 2011

    ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவுகளை பட்டியலிடும் இணையம்

    நாம் சாப்பிடும் உணவு ஒவ்வொரு பருவகாலத்திற்கும் மாறுபடுகிறது. சில உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் சில காலங்களில் கிடைப்பதில்லை.அந்தந்த கால நேரத்தில் கிடைக்கும் சத்தான உணவு என்ன என்பதை நமக்கு பட்டியலிட்டு காட்டுகிறது ஒரு தளம்.
    மாறி வரும் சூழ்நிலையால் ஒவ்வொரு காலநிலைகளிலும் சில இயற்கையான பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அப்படி கிடைக்கும் பொருட்களில் எதையெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். எந்த பொருட்கள் எல்லாம் நமக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கொடுப்பதற்காக உள்ளது என்பதை நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது.
    இத்தளத்திற்கு சென்றால் ஒவ்வொரு பருவகால நிலைக்கும் ஏற்ப நாம் சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் என்னென்ன என்பதை துல்லியமாக கூறுகிறது.
    நாம் எந்த மாதத்தில் இருக்கிறோம் என்பதையும் இந்த மாதத்தில் கிடைக்கூடிய பொருட்கள் என்ன என்பதில் தொடங்கி, ஒவ்வொரு காய்கறிகளிலும் கிடைக்கும் புரதச்சத்து மற்றும் அந்த குறிப்பிட்ட காய்கறியின் வரலாறு அது எந்த நாட்டில் அதிகமாக கிடைக்கும் இப்படி அனைத்து விதமான தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது.
    நம் உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரு இயற்கை மருத்துவர் என்னவெல்லாம் சாப்பிடச்சொல்வாரே அதை எல்லாம் இத்தளம் நமக்கு அறிவிக்கிறது.
    இணையதள முகவரி