• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Friday, April 29, 2011

    யூடியூப் வீடியோக்களை MP3யாக மாற்றம் செய்ய

    யூடியூப் தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த தளத்தில் இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன.யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவில் இருந்து ஓடியோவினை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் முதலில் வீடியோவை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து ஓடியோவை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.
    இல்லையெனில் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளின் உதவியினை நாடிச் செல்ல வேண்டும். இதற்கு பதிலாக ஓன்லைனிலேயே யூடியூப் வீடியோவினை MP3 யாக மாற்றம் செய்ய ஒரு தளம் வழிவகை செய்கிறது.
    சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மாற்றம் செய்ய வேண்டிய முகவரியை(URL) உள்ளிடவும். பின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அடுத்து எந்த போர்மெட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
    அடுத்து தரத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். அந்த சுட்டியை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
    இவ்வாறு வீடியோவில் இருந்து ஓடியோவை பிரித்து எடுக்க நாம் எந்த ஒரு மென்பொருளையும் கையாள வேண்டியது இல்லை. இணையத்தில் உதவியுடனே மாற்றம் செய்து கொள்ள முடியும்.
    இணையதள முகவரி