மாதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடித்தால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.உண்ணாவிரதம் தொடர்பாக யுடா பகுதியைச் சேர்ந்த 200 நபர்களின் ஆரோக்கியம் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களில் 75 சதவீதத்தினருக்கு ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் குறுகி இருப்பது தெரியவந்தது.
ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் இதயத்தில் இருந்து உடலின் இதர உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் ஆகும். ஆர்ட்ரிஸ் குழாய்கள் குறுகினால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படலாம். அடிக்கடி உணவை தவிர்த்த நபர்களில் 63 சதவீத பேருக்கு ஆர்ட்ரிஸ் குழாய் அடைப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
உண்ணாவிரதத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்வதால் நீரிழிவு விகிதத்தை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களிடம் இரண்டாவது கட்ட சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதம் இருப்பதால் மனித வளர்ச்சிக்கு தேவையான ஹோர்மோன் குறிப்பிட்ட அளவு தூண்டப்படுகிறது. மனித உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவுகிறது. கொழுப்பு குறைவதால் இதய நோய்களை தவிர்க்கலாம். |