தூக்க முறைகளால் உடல் பருமனை சரி செய்ய முடியும் என அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இரவில் அதிக நேரம் தூக்கம் இல்லாதவர்களும், அதிகம் தூங்குபவர்களும் உடல் எடை குறைப்பு செய்வதில் பெரும் சிரமப்படுகிறார்கள்.
உடல் எடை குறைப்பு தொடர்பாக சர்வதேச உடல் பருமன் இதழில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மன இறுக்கம் அதிகம் இல்லாதவர்கள் பெருமளவு உடல் எடை குறைப்பு செய்ய முடிகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த தூக்க ஆய்வு நிபுணர் ஒருவர் கூறியதாவது: மிக அதிக அளவில் உணவினை எடுத்துக் கொண்டு, நன்றாக நடமாடும் பட்சத்தில் கூடுதல் எடை அதிகரிப்பை தவிர்க்க முடியும். அதே நேரத்தில் இரவில் போதிய உறக்கமும் தேவை என அவர் வலியுறுத்துகிறார்.
அமெரிக்காவில் உள்ள உடல் ஆரோக்கியத்திற்கான கைசர் பெர்மனேட் ஆய்வு மையம் உடல் எடை குறைப்பு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்களது ஆய்வில் உரிய நேரத்தில் தூங்கி எழ வேண்டும். மன இறுக்கம் இல்லாத நிலையை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் தூக்க நிபுணர் டாக்டர் நீல் ஸ்டேன்லி கூறுகையில்,"உணவுக் கட்டுப்பாடு, நடைபயிற்சி மட்டுமல்ல நல்ல தூக்கமும் உடல் எடை குறைப்புக்கு உதவுவதை காண முடிந்துள்ளது" என்றார். |