• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 3, 2011

    கைத்தொலைபேசியை இனி காலணி மூலம் சார்ஜ் செய்யலாம்

    வெளியில் பயணங்கள் செல்லும் போது மொபைல் போன் சார்ஜ் தீர்ந்து விட்டால் கைசேதப்படுகின்றவர்கள் இன்றைய உலகில் ஏராளம்.அத்துடன் இன்றைய உலகில் மொபைல் போன் ஒரு அத்தியாவசியமான விடயமாகி விட்ட நிலையில் அதன் சார்ஜ் தீர்ந்து விடுவதென்பது கடும் சிக்கலான விடயம்.
    அதனைத் தீர்க்கும் வகையில் ஐரோப்பாவின் முன்னணி மொபைல் கம்பனிகளில் ஒன்றான ஒரேஞ் போன் கம்பனி மொபைல் சார்ஜ் செய்யத்தக்க காலணியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
    அக்காலணியிலுள்ள விசேடம் யாதெனில் நீங்கள் நடக்கும் பொது உண்டாகும் வெப்ப சக்தியை மின்சார சக்தியாக மற்றும். இதன் மூலம் உங்கள் மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
    ஆனால் 1 மணிநேரம் சார்ஜ் செய்வதற்கு நீங்கள் 12 மணிநேரம் நடக்க வேண்டும். அதனை இன்னும் மேம்படுத்தி குறுகிய நேரத்தில் கூடுதலான சார்ஜ் செய்யத்தக்க வகையில் காலணியை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிகளை ஒரேஞ் நிறுவன தொழில்நுட்பவியலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
    ஆயினும் மனிதர்களுக்கு உடற்பயிற்சியாகவும், மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்வதற்கு வழியாகவும் இருக்கும் காரணத்தால் இக்காலணிக்கு மவுசு அதிகரித்து வருகின்றது.