• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 3, 2011

    உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு)

    மிகப் பிரம்மாண்டமான உருளைக்கிழங்கு போல இருக்கும் பூமியின் தோற்றத்தை ஐரோப்பாவின் கோஸ் செயற்கை கோள் வெளியிட்டுள்ளது.செயற்கை கோள் வெளியிட்டுள்ள பூமிப்பந்து வரைபடத்தில் மஞ்சள், நீலம், சிவப்பு வண்ணப் பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ள பூமிப்பகுதி மிக அதிக ஈர்ப்புச் சக்தியை குறிப்பிடுவதாக உள்ளது. நீல நிறப் பகுதி சுட்டிக் காட்டப்பட்டுள்ள இடத்தில் ஈர்ப்புச் சக்தி பலவீனமாக உள்ளது.
    ஐரோப்பிய செயற்கை கோள் ஆய்வில் பூமியில் உள்ள கடல் பகுதியில் கடல்கள் எவ்வாறு நகர்கின்றன என்றும் அவை சூரிய வெப்பத்தை மீண்டும் எப்படி உலகப் பகுதிகளுக்கு திருப்புகின்றன என்றும் கவனிக்கப்படுகிறது. உலக வானிலை ஆய்வில் இந்தத் தகவல் மிக முக்கியமானது என ஆய்வு விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
    ஜப்பானில் இந்த மாதம் 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும், கடந்த ஆண்டு சிலியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்கும் பூமி அடுக்கில் பெரும் பாறைகள் திடீரென நகர்ந்ததே காரணம் என ஜேர்மன் ஜியோ டெடிக் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ஜோகன்ஸ் பவுமேன் தெரிவித்தார்.
    ஜப்பானில் மிகப் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அதற்கான சமிஞ்ஞைகள் செயற்கைகோளில் சிறிய அளவிலேயே இருந்தன. இகு குறித்தும் ஆய்வு செய்வதாக பவுமேன் தெரிவித்தார். ஜரோப்பாவின் கோஸ் செயற்கை கோள் இதர அறிவியல் செயற்கை கோளைக் காட்டிலும் தாழ்வாகவே பறந்து பூமியின் விவரங்களைச் சேகரித்து வருகிறது.
    கோஸ் என்பது ஈர்ப்பு தளம் மற்றும் கடல் சுழற்சி கண்டுபிடிப்பு என்பதன் சுருக்கமாகும். இந்த கோஸ் செயற்கைகோள் கடந்த 2009 ம் ஆண்டு ஏவப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோஸ் ஒரு அறிவியல் நவீனமாகவே இருந்தது. இந்த செயற்கைகோளானது 2014 ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என ஆய்வுக் குழு தெரிவித்தது.