• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 3, 2011

    கோழி இறக்கைகளை பிளாஸ்டிக் ஆதாரப்பொருளாக பயன்படுத்தலாம்

    ஆண்டுதோறும் பல லட்சம் டன் கோழி இறக்கைகள் எந்த வித பயன்பாடும் இல்லாமல் அழிக்கப்படுகின்றன.குப்பையில் வீணாக போகும் கோழி இறக்கைகளை பிளாஸ்டிக் தயாரிப்பு பணியில் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    அமெரிக்க ரசாயன சமூக கூட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் கோழி இறக்கைகளை பிளாஸ்டிக் தயாரிப்பு பணிக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
    இந்த கோழி இறக்கைகளை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோலியத்தில் இருந்து பெறப்படும் உப பொருட்களை பிளாஸ்டிக் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம். கோழி இறக்கைகளை தொழிற்சாலைகளில் சுலபமாக பயன்படுத்துவது தொடர்பாக பெரும் அளவில் சோதனை செய்யப்பட வேண்டி உள்ளது.
    கோழி இறக்கைகள், தலைமுடி மற்றும் விரல் நகங்கள் உறுதி மிக்க புரதத்தை கொண்டுள்ளது. இந்தப் புரதம் மூலம் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பில் எடைக்குறைப்பையும் பெட்ரோலிய கூட்டுப்பொருளை அதிகம் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியும்.
    பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பில் கோழி இறக்கைகளை பயன்படுத்துவது தொடரபாக யு.எஸ் வேளாண் ஆணையகத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையை லின்கோல்ன் நெப்ரஸ்கா பல்கலைக்கழக விஞ்ஞானி யிகி யாங் சமர்ப்பித்துள்ளார்.
    பிளாஸ்டிக் தயாரிப்பில் 50 சதவீத கூட்டுப்பொருளாக கோழி இறக்கைகள் அமையும் என அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.