• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Saturday, April 9, 2011

    குழந்தைகளின் மறக்க முடியாத நிகழ்ச்சிகளை இணையத்தில் சேமித்து வைக்க

    நம் வீட்டு சுட்டி குழந்தைகள் சிறு வயதில் செய்யும் அழகான சேட்டைகளை ஓன்லைன் மூலம் சேமித்து வைக்க இலவச டைரி அளிக்கிறது ஒரு தளம்.சிறுவயதில் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் சேமித்து வைத்திருப்போம். ஆனால் இனி நம் குழந்தைகளின் புகைப்படங்களை மட்டுமல்ல அவர்கள் சிறுவயதில் செய்யும் அத்தனை நிகழ்ச்சிகளையும் ஓன்லைன் டைரியில் இலவசமாக சேமித்து வைக்கலாம்.
    இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம் குழந்தைகள் சிறுவயதில் கடந்து வந்த அனைத்து மகிழ்ச்சியான தருணங்களை அழகாக சேமித்து வைக்கலாம்.
    புகைப்படம் மட்டுமல்லாமல் எந்த மாதம், எந்த வருடம், எந்த திகதியில் இவர்கள் செய்த சுட்டித்தனம் என்ன என்பதை எழுத்துப்பூர்வமாகவும் சேமிக்கலாம். கையில் வைத்திருக்கும் டைரி கூட ஒருநாள் பழசாகி போகலாம்.
    ஆனால் ஓன்லைன் மூலம் சேமித்து வைத்திருப்பதால் கால நிலைகள் கடந்து நம் குழந்தைகள் கடந்து வந்த பாதை சேமிக்கப்பட்டிருக்கும். புதுமையை விரும்பும் அனைத்துப் பெற்றோர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
    இணையதள முகவரி