• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Tuesday, April 5, 2011

    செயற்கை இதயத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

    மனித இதயத்தை ஆய்வு கூடங்களில் உருவாக்கும் ஒரு புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான இருதய நோயாளிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையவுள்ளது.இதுவரை காலமும் இதயம் செயற்படாத நிலையில் அதற்குப் பதிலாக மார்பக அறுவைச் சிகிச்சை மூலம் அதனைக் குணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் செயற்கை உலோகத்தினாலான இதயம் பொருத்தப்பட்டதும் உண்டு. அதன் காரணமாக ஒருசிலர் ஒவ்வாமை நோய்களினால் பாதிக்கப்பட்டதும் உண்டு.
    ஆயினும் இம்முறை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கை இதயமானது மனித உடலுடன் முழுக்க ஒத்துப் போகும் இதயமாகும். செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இதயம் ஒரு சில வாரங்களில் துடிக்க ஆரம்பிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது ஒரு பாரிய ஆராய்ச்சித் திட்டத்தின் முதலாவது படியாகும்.
    இதைத் தொடர்ந்து ஈரல், நுரையீரல், சிறுநீரகம் என்பனவற்றையும் ஆய்வு கூடங்களில் உருவாக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
    நன்கொடையாக வழங்கப்படும் மனித உறுப்புக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தசைக்கலங்களில் இருந்தே செயற்கை இருதயம் உருவாக்கப்படுகின்றது.