தாய்மார் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.பெரும்பாலான குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு மூல காரணமாக அமைவது வீட்டில் தாய்மார் மகிழ்ச்சியாக இருக்கின்றமையே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்ல தாய்மார் மகிழ்ச்சியாக இருக்கின்றமையைக் காணும் போது குழந்தைகள் அதைவிட மகிழ்ச்சியாக இருக்க முயலுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
தாய்மார் மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில் இளவயதுப் குழந்தைகள் குடும்பத்தில் திருப்தியற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ள இன்னொரு விடயம் குழந்தைகள் தந்தையின் மகிழ்ச்சியைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்பதாகும்.
தந்தையின் மகிழ்ச்சி குழந்தைகளின் வாழ்வில் எந்தப் பாதிப்பையும் அவ்வளவாக ஏற்படுத்துவதும் இல்லை. 40 ஆயிரம் பிரிட்டிஷ் குடும்பங்களைச் சேர்ந்த பத்து முதல் பதினைந்து வயதுக்கு இடைப்பட்டோர் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. |