கூகுளின் தேடுதலில் நாள்தோறும் 1 மில்லியன் புகைப்படங்களுக்கு மேல் தேடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடைய தேடல் தரவுத்தளத்திலும் ஒளிப்படங்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது.வலைப்பதிவில் கட்டுரைகளின் இடையே தேவையான இடங்களில் செய்திக்கேற்ற ஒளிப்படங்களைப் பயன்படுத்துவோம். தேடியந்திரங்கள் நமது வலைப்பதிவைப் பார்வையிடும் போது ஒளிப்படங்கள் முறையான வகையில் இருந்தால் அதிலிருக்கும் சில விடயங்களையும் புரிந்து கொண்டு அப்டேட் செய்கின்றன.
அதனால் வலைப்பதிவில் ஒளிப்படங்களைப் பயன்படுத்தும் போது தேடுபொறிகளுக்கு ஏற்றவகையில் மெருகூட்டினால் வலைப்பதிவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், வலைப்பக்கத்தின் தரமும் உயரும்.
1. சரியான பெயரிடுங்கள்: முக்கியமான விடயம் ஒளிப்படங்களுக்குச் சரியாக பெயரிட வேண்டும். நாம் மொபைல், கேமரா அல்லது கணணியிலிருந்து புகைப்படங்களை அப்லோடு செய்வோம்.
ஆனால் அதன் பெயர் எப்படியிருக்கிறது என்று கவனிப்பதில்லை. பதிவின் கருத்துக்கு ஏற்றபடி பெயர் இருந்தால் நலம். இரண்டு மூன்று சொற்கள் வந்தால் இடையே – அல்லது _ குறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சரியான பெயரில்லாத படங்களை விட நல்ல பெயருள்ள படங்கள் தேடியந்திரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
2. ஒளிப்படங்களுக்கு ALT Tag சேர்த்தல்: ALT என்பது பதிலி(Alternative tags) என்று பொருள்படும். தேடியந்திரங்கள் பதிவுகளைச் சேர்க்கும் போது இந்த ஆல்ட் டேகில் கொடுக்கப்படும் சொற்கள் அல்லது வரிகளை வைத்து இவை ஒளிப்படங்கள் என்று புரிந்து கொள்கின்றன.
மேலும் இந்த குறிச்சொற்களை வைத்து ஒளிப்படங்களை தேடுதலில் காண்பிக்க வகைப்படுத்திக் கொள்கின்றன. இதனைச் சேர்ப்பது Wordpress இல் எளிமையானது. அப்லோடு செய்யப்படும் போதே வலதுபுறத்தில் ALT க்கான பெட்டியில் அடித்துவிடலாம்.
ஆனால் பிளாக்கரில் இந்த வசதியில்லை, அதனால் அப்லோடு செய்து விட்டு Edit டேபில் சென்று அந்த ஒளிப்படத்தின் கோடிங்கைத் தேட வேண்டும். குறிப்பிட்ட ஆல்ட் டேகைக் கண்டுபிடித்து அதனை நிரப்பவும்.
3. பதிவின் தேவையான இடங்களில் மட்டுமே புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டும். படங்களை நடுவிலோ அல்லது இடது, வலது என்று சரியான இடத்தில் (Proper Image position) பயன்படுத்துங்கள்.
4. கொப்பி செய்த படங்களைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை: தேடியந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தேடும் போதே நீங்கள் கவனிக்கலாம், படத்தின் அளவுகள், வண்ணம், தேதி, நாடு போன்றவற்றை வைத்தும் தேடலாம்.
வலைப்பதிவில் கூகுளிலிருந்து எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தும் போது கூகுள் தேடியந்திரத்தின் தரவுத்தளத்தில் உள்ள படங்களின் பண்புகளை வைத்து கொப்பி செய்யப்பட்டுள்ளதா என்று கண்டறிந்துவிடும்.
ஒளிப்படங்களை கொப்பி செய்வதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது. ஒவ்வொரு ஒளிப்படங்கள் கொப்பிரைட் செய்யப்பட்டிருக்கும். இதனால் கூகுள் உங்கள் வலைப்பதிவை முடக்கும் அபாயமும் இருக்கிறது.
எனவே கூகுள் மற்றும் வேறு எதேனும் இணையதளங்களில் இருந்து படங்களை எடுத்தால் தேவையான அளவுக்கு அதனை வெட்டி விடுங்கள் அல்லது அளவைக் குறைத்து விடுங்கள். மேலும் நேர்த்தியான ALT குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் படங்களைத் தனித்துவம் ஆக்குங்கள். |