சனி மற்றும் வியாழன் கோள்களின் வளையத்தில் ஒரு புது வித அலைப்பகுதி காணப்பட்டது. இந்த அலைப்பகுதி நீண்ட வால் நட்சத்திரங்கள் தாக்கம் தொடர்புடையதாக இருந்தது.வால் நட்சத்திரம் ஷீமெக்கர் லெவி 9 கடந்த 1994 ம் ஆண்டு இந்த கிரகத்தில் மோதி தாக்கியது. இது தொடர்பாக இரு வெவ்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 1996 மற்றும் 2000 ம் ஆண்டில் கலிலியோ விண்கலம் எடுத்த வியாழன் கிரகத்தின் வளைய பிம்பங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து 2007 ம் ஆண்டு புதிய பூமி வான் எல்லைப்பகுதி ஆய்வும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து காசினி விண்கலம் 2009 ம் ஆண்டில் சனிக்கிரகம் வளையம் குறித்த பிம்பங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் போது சனிக்கிரக வளையப்பகுதியில் கரடு முரடான அலை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சனிக்கோளின் "சி" வளையம் முழுவதும் அலைவடிவத்தாக்கம் ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் வரை காணப்பட்டது. இதே வடிவதாக்கம் இக்கிரகத்தின் வளையத்திலும் காணப்பட்டது.
வியாழன் கிரகத்திலும் இரு வளையப்பகுதியில் அலைவடிவ பிம்பத்தாக்கம் இருந்தது. இந்த அலைவடிவ பாதிப்புக்கு ஷீமேக்கர் லெவி 9 காரணம் என ஆய்வாளர்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளனர்.
|