![]() ஒவ்வொரு கணக்குக்கும் தனிதனி கடவுச்சொல் வைத்துக்கொண்டால், எந்த கடவுச்சொல் எந்த கணக்குக்கு கொடுத்தோம் என குழப்பம் நேரிடும். இந்த குழப்பங்களை தீர்க்க இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருளில் நம்மிடம் உள்ள கணக்கு விவரங்களையும், கடவுச்சொல்லையும் இதனிடம் கொடுத்துவிடவும். இந்த மென்பொருள் திறக்க ஒரே ஓரு கடவுச்சொல் மட்டும் நாம் நினைவில் வைத்துக் கொண்டு இருந்தால் போதும். இந்த மென்பொருளை முதலில் தரவிறக்கியதுடன் ஓபன் ஆகும் விண்டோவில் Open Password Database என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்யுங்கள். சேமிக்கும் கோப்பை .psafe3 என்கின்ற பெயர்கொண்டு சேமியுங்கள். அடுத்து இதில் உள்ள Safe Combination ல் உங்களது கடவுச்சொல்லை டைப் செய்யுங்கள். இதில் உங்களுக்கு கீபேர்ட் கொடுத்துள்ளார்கள். தேவையான கீபோட்டில் தேவையான வார்த்தைகளை தேர்வு செய்து அதில் உள்ள Insert கிளிக் செய்யுங்கள். Title என்பதில் உங்கள் இமெயில் கணக்கு பெயர், நெட்ஓர்க் பெயர், வெப் தளத்தின் பெயரை தட்டச்சு செய்யுங்கள். அடுத்துள்ள User Name என்பதில் அந்த கணக்கானது உங்கள் பெயரை அல்லது லொகின் பெயரை அல்லது உங்களது இமெயில் முகவரியை தட்டச்சு செய்யுங்கள். Password என்பதில் உங்கள் கடவுச்சொல்லை கவனமாக தட்டச்சு செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்தது சரியா என அதை Show கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளவும். Notes என்பதில் மேலும் விவரங்கள் தேவையெனில் தட்டச்சு செய்து கொள்ளுங்கள். ஓ.கே. கிளிக் செய்யுங்கள். உங்கள் அந்த கணக்குக்கான கடவுச்சொல் சேமிப்பாகிவிட்டது. இதைப்போல் ஒவ்வோரு கணக்குக்கும் விவரங்களை சேமித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய லொகின் மற்றும் கடவுச்சொல்லை மானிட்டரில் பார்க்கமால் அதை கிளிப் பேர்ட்டில் கொப்பி செய்து தேவையான இடத்தில் அதை பேஸ்ட் செய்து கொள்ளலாம். இதற்கு முதலில் உங்கள் கடவுச்சொல் சேப் திறந்து கொள்ளுங்கள். நீங்கள் சேமித்துள்ள அனைத்து கணக்குகளும் தெரியும். அதில் உங்களுக்கு தேவையான கணக்கை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் திறக்க வேண்டிய வெப்தளத்தை திறந்து கொள்ளுங்கள். மீண்டும் கடவுச்சொல் சேப் தளத்திற்கு வாருங்கள். அதில் Edit டேபில் உள்ள Copy Username to Clipboard கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் நீங்கள் திறந்துள்ள வெப்தளத்திற்கு வந்து லொகின் பெயர் உள்ள இடத்தில் Cont+v அழுத்தினால் உங்கள் லொகின் பெயர் வந்துவிடும். இதில் Ctrl+U அழுத்தினால் உங்கள் பெயரும் Ctrl+C அழுத்தினால் உங்கள் கடவுச்சொல்லும் கொப்பி ஆகும். அதை கொண்டு சென்று அந்த வெப்தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம். டைப் அடிக்க வேண்டிய வேலை இல்லை. அதேப்போல் இந்த மென்பொருளை நீங்கள் முடிவிட்டால் கிளிப்போர்ட்டில் உள்ளது தானாகவே அழிந்துவிடும். தரவிறக்க சுட்டி |