ஓன்லைன் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.இதே நேரத்தில் ஓன்லைன் மூலம் கொள்ளையடிப்பதும் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. ஓன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.
2. இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.
3. Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிறக்காதீர்கள் இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்டும் கூடவே வருகின்றது.
4. பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.
5. கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது தகவல் வந்து Ok , close என்று இருந்தால் நீங்கள் Esc பொத்தானை மட்டும் அழுத்துங்கள். ஏன் என்றால் ok, cancel , close எதை அழுத்தினாலும் ஒரே வேலையைத் தான் செய்யும்.
5. உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது Restart. ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல் இருக்கட்டும்.
6. கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணணியில் சேமித்து வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.
7. நெட்கபேகளில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை தவிர்க்க பாருங்கள். பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள். |