• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 3, 2011

    உலகின் அழகான நகரங்களை முப்பரிமாணத்தில் பார்க்க

    உலகின் எந்த நாட்டிற்கு, எந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டுமோ அந்த இடங்களை High Resolution படங்களாகவும் இதைப்பற்றிய மேப் மற்றும் கூடுதல் விபரங்கள் சொல்ல ஒரு தளம் உள்ளது.வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் முன் அந்த நாட்டின் பல தகவல்கள் நாம் தெரிந்து வைத்துக்கொள்வோம். மேப் மட்டும் வைத்துக்கொண்டு அதன் அழகை நாம் ரசிக்க முடியாது என்பதற்காக ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள் முக்கிய இடங்கள் ஆகியவற்றின் படங்களை நமக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது.
    இந்தத் தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டிற்கு எந்த நகரத்திற்கு செல்ல வேண்டுமோ அதை இத்தளத்தில் இடது பக்கம் இருக்கும். Browse other Tours என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும். அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த நகரங்களின் அழகான புகைப்படங்கள் காட்டப்படும்.
    அதில் எந்த இடம் பிடித்திருக்கிறதோ அந்த இடத்தின் படத்தை சொடுக்கி High Resolution ல் பார்க்கலாம். இதில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் நாம் பார்க்கும் படத்தை முப்பரிமாணத்தில் சுற்றி பார்க்கலாம். map என்பதை சொடுக்கி அந்த இடத்தைப் பற்றிய மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
    இணையதள முகவரி