• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 3, 2011

    குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்


    தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கான காரணம் குறித்து அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டர் சாய் இருதய ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.அப்போது தாயின் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருதயம் உருவாகும் போது ஏற்படும் சில மரபணு கோளாறே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது நன்கு வளர்ச்சி அடையாத மரபணு அல்லது அதிரடி மாற்றங்களால் தான் புதுவிதமான இருதய நோய்கள் ஏற்படுகின்றன.
    இந்த நோய்கள் கருவில் வளரும் குழந்தையின் இருதயம் உருவாகும் போது ஏற்படுவது இல்லை. மாறாக அவை இருதயத்தின் வெளிப்புறத்தில் ஏற்படுகிறது. இது குறித்த விரிவான ஆய்வை நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
    இந்த ஆய்வுக்காக எலிகள் பயன்படுத்தப்பட்டன. அதில் "சிடெடு 2" என்ற மரபணுவினால் தான் இருதய நோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த மரபணு இல்லாத குழந்தைக்கு எந்தவித இருதய நோயும் ஏற்படுவதில்லை.

    இதன் மூலம் இருதய நோய் ஏற்பட மரபணுவே காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.