தேர்வு நேரங்களில் உருவாகும் மன அழுத்தம், பயம் ஆகியவற்றைப் போக்க படிப்பதில் சிறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.இரத்த அழுத்தத்திற்கும் இது நன்மை பயக்கும் என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேசன் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட தகவல்களை பி.எம்.சி பப்ளிக் ஹெல்த் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும். மன அழுத்தமும் இதய நோய்களுக்கு காரணமாக அமைகிறது. அதே சமயம் அதிகக் கல்வியறிவு குறைவான அளவே இதய நோய்களை உண்டு பண்ணுகிறது.
முப்பாதாண்டுகளாக 3890 பேரிடம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று வகைப் பிரிவினராக மக்கள் பிரிக்கப்பட்டனர். குறைவாகப் படித்தவர்கள், நடுத்தரவாகப் படித்தவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் என பகுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இரத்த அழுத்தம் 3 ஆண்டுகளுக்கு பின் கணக்கிடப்பட்டது. பெண்களில் அதிகம் படித்தவர்களைக் காட்டிலும் குறைவாகப் படித்தவர்களுக்கு இரத்த அழுத்தம் 3.26 mm Hg அதிகம் காணப்பட்டது. ஆண்களில் இந்த வித்தியாசதம் 2.26 mm Hg ஆக இருந்தது.
இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் சுரிக் லோக்ஸ் கூறுகையில்,"குறைந்த படிப்புடைய பெண்கள் மனத்தாழ்வு நோயால் பாதிக்கப்படுகின்றனர். மோசமான வாழ்க்கை சூழ்நிலை, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்தல் போன்றவையும் இதற்குக் காரணம்" என்றார். |