• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 2, 2011

    கடலுக்கு அடியில் மலேரியாவை துரத்தும் பாசி கண்டுபிடிப்பு

    கொசுக்கள் மூலம் பரவும் ப்ளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற ஒட்டுண்ணியின் மூலம் மலேரியா நோய் பரவுகிறது. உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் உலக சுகாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுப்புது மருந்துகளும் அறிமுகமாகி வருகின்றன.
    அந்த வகையில் "சீ வீட்" என்ற கடல் தாவரம் மலேரியா காய்ச்சலை எளிதாக கட்டுப்படுத்தும் என்ற தகவல் தற்போதைய ஆய்வில் வெளியாகி உள்ளது. ஜார்ஜியா தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நீண்ட ஆய்வு மேற்கொண்டனர்.
    சீ வீட் தாவரத்தில் உள்ள ரசாயனப் பொருள் மலேரியா கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றுள்ளது. அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட இத்தாவரம், பங்கல் என்ற காளான் வகை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    ஆய்வு முடிவுகள் இறுதிக்கட்ட ஒப்புதலுக்கு காத்திருக்கின்றன. அதன் பிறகே இந்த தாவர மருந்து சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.