கோடைக் காலம் சுளீர் என்று ஆரம்பித்து விட்டது. எந்த உணவை உண்டால் பித்தம் தெளியும் என்கிற கதையாய் மக்கள் வெயிலை விரட்ட ஆயத்தமாகும் நேரம். வெயிலுக்கு இதம் தரும் விசயங்களில் முக்கியமானது தர்பூஸ். செலவு அதிகமில்லாத இப்பழத்தில் மெக்னீசியம், அயோடின், வைட்டமின் பி, சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.ஆபத்தில்லாத சுக்ரோஸ் கூட இதில் உள்ளது. தாகம், தொண்டை வறட்சி, விக்கல் போன்ற வற்றை போக்கும் தர்பூஸ். இதனை தொடர்ந்து சாப்பிட உடம்பு உஷ்ணம் குறையும். சரும நோய்களைக் கூட குணப்படுத்தும் ஆற்றல் தர்பூஸூக்கு உண்டு. கோடையில் ஏற்படும் கண் எரிச்சல், வாய்ப்புண், குடல் அழற்சியையும் தர்பூஸ் குணப்படுத்தும்.