![Food Habits : Garlic as Medicine - Food Habits and Nutrition Guide in Tamil Food Habits : Garlic as Medicine - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/garlic.jpg)
இந்த பூண்டின் மருத்துவ பயன்கள் பற்றி...
- பூண்டையும் உப்பையும் சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல் சரிவு குணப்படும்.
- காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.
- பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்து வர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
- இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.
- டான்ஸில் என்கிற உள்நாக்கு வளர்ந்திரப்பவர்கள் - அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டு சாறினை தடவி குணம் கிடைக்கும்.
- அஜீரணம், வயிற்றுப்புசம் போன்ற பாதிப்பிருந்தால் வெள்ளைப் பூண்டுடன் மிளகு, கையாந்துரையை அரைத்து உண்ணலாம்.
- பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
- பூண்டு பல மருத்துவ நன்மை கொண்டு இருப்பினும் கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்தி விடும்.