• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 2, 2011

    தவறான வாழ்க்கை முறையே புற்றுநோய்க்கு காரணம்: ஆய்வுத் தகவல்


    பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற நிறுவனம் இரு வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.ஒன்று பெண்கள் புகைபிடிப்பது பற்றியது. இரண்டாவது உடற்பயிற்சியினால் பெண்களுக்கு குடல் புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றியது. புகை பிடிக்காத பெண்களை விட சிறு வயதிலும், பருவ வயதிலும் புகைப் பிடிப்பவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
    ஆனாலும் மிகக் குறைவாக புகை பிடிப்பவர்களுக்கு இந்த அபாயம் இல்லை. 50 லிருந்து 79 வயதுடைய 80000 பெண்களிடம் பத்தாண்டுகளாக இவ்வாய்வு நடத்தப்பட்டது. சுறுசுறுப்பான உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு குடல் வீக்க நோய் மூன்று மடங்கு குறைவாக இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
    இது குறித்து வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் முன்னோடி ஆசிரியர் கேத்லீன் வோலின் கூறுகையில்,"சுறுசுறுப்பான உடற்பயிற்சி செய்வது குடல் வீக்க நோய் வருவதை தடுக்கும். மேலும் உடற்பயிற்சியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    இன்சுலின் அளவு குறைவது குடல் வீக்க நோய் வருவதை தடுக்கும் காரணியாகும். தினமும் அரை மணி நேரம் மிதமான உடற்பயிற்சி செய்வதும், அளவான உடல் எடையும் புற்றுநோய் வருவதை தடுக்கும் என இந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.