• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 3, 2011

    மஞ்சள்... பக்கவாத பாதிப்பை சீரமைக்கும் : ஆய்வு




    உணவில் உபயோகப்படுத்தப்படும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள மருந்து, பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் சிலவற்றை சீர் செய்வதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் சாதகமான முடிவுகள் வந்துள்ளதால், மனிதர்களிடம் சோதனை செய்ய தயாராகி வருவதாக, இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ள
    செடார்ஸ் சினாய் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை முயல்களிடம் சோதிக்கப்பட்டபோது. அம்மருந்து மூளையின் செல்களைச் சென்றடைந்து தசை மற்றும் அசைவு பிரச்னைகளை தீர்த்துள்ளது.
    மஞ்சளின் மருத்துவத் தன்மையுள்ள கர்குமினை சிஎன்பி-001 என வேறொரு வடிவத்துக்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மாற்றி, இந்த ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து மிகவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய தி ஸ்ட்ரோக் அசோசியேஷன், இது மிக முக்கிய திருப்பம் கொண்ட ஆய்வு என கருத்து தெரிவித்துள்ளது.
    தற்போதைக்கு இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், முழுமையாகக் குணப்படுத்த கூடிய மருந்தை உருவாக்க பல ஆண்டு காலம் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.