![](http://new.vikatan.com/av/2011/02/23/images/doctor.jpg)
![](http://new.vikatan.com/av/2011/02/23/images/p47.jpg)
''எப்பவுமே அழகா இருக்கணும்கிற எண்ணம் எப்போ வந்தது?''
''மிகச் சரியா 17 வயதில்! மீனாட்சி கல்லூரியில் 'சாகுந்தலம்’ என்ற நாடகத்தில் சகுந்தலையா நடிச்சேன். அதில் எனக்கு முழுக்க முழுக்கப் பூக்களால் ஆன உடை. 'கொள்ளை அழகு’ன்னு பார்த்தவங்க பாராட்ட... 'அழகுங்கிறது காஸ்ட்லியான விஷயம் இல்லை’ங்கிறது அப்போதான் புரிஞ்சது. தன்னை அழகுபடுத்திக்கிறது பிறரை ஈர்ப்பதற்காக இல்லை. அது நமக்கா னதுதான் என்பதை சங்க இலக்கியம் எனக்குப் புரியவெச்சது!''
''தினமும் உடற்பயிற்சிகள் செய்வீங்களா?''
''காலையில் 15 நிமிடங்கள் வாக்கிங்... 10 நிமிடங்கள் வீட்டிலேயே சைக்கிளிங். அப்புறம் ஓஷோவின் ஜிப்பர்ஸ் தியானம்... அதாவது, 10 நிமிஷம், 'லபோ அதா குந்தா வெளியா கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்’னு வாய்விட்டுச் சத்தமா சொல்வேன். அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்கிறீங்களா? ஸாரிங்க... எனக்கே தெரியாது. ஜிப்பர்னா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகள்னு அர்த்தம். சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை 10 நிமிஷங்கள் சொன்னா, அதுதான் ஓஷோவோட ஜிப்பர்ஸ் தியானம். ரொம்பத் தெளிவா சொல்லணும்னா, 10 நிமிஷம் பைத்தியம் பிடிச்ச மாதிரி உளறணும். மைண்ட்டை ட்ராப் பண்ற பயிற்சி அது. அவ்வளவுதான் நம்ம ஸ்பெஷல்!''
''சாப்பாடு விஷயத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள்?''
''அப்படி எதுவும் கிடையாது. தேவைக்கு ஏற்பச் சாப்பிடுவேன். இயற்கையான உணவுக்கு எப்பவுமே முக்கியத்துவம் கொடுப்பேன்.
![](http://new.vikatan.com/av/2011/02/23/images/p47a.jpg)
![](http://new.vikatan.com/av/2011/02/23/images/p48.jpg)
''அழகை விரும்பும் பெண்கள் பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர்களை நோக்கி ஓடுறாங்களே...''
''என் தலைமுடிக்கு நான் ஷாம்பு பயன்படுத்தியதே கிடையாது. செம்பருத்தியையும் சீயக்காயையும் தாண்டிய மகத்துவப் பொருள் தலைமுடிக்கு வேற எதுவுமே இல்லை. இயற்கையோட வரத்தைப் புறக் கணிச்சுட்டு, ஹேர் மசாஜ், விட்டமின் ஆயில்னு தேடுறது தேவையற்ற வேலை. நம்ம அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும், இயற்கையால கிடைக்காத எதுவும் செயற்கையால கிடைக்காது!''
தமிழச்சி சொல்வதை ஆமோதிப்பதுபோல அவருடைய கன்னக் குழிகளும் சிரிக்கின்றன!