வெண்துளசி - 20 கிராம்
கருந்துளசி - 20 கிராம்
மிளகு - 10 கிராம்
அதிமதுரம் - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
கோஷ்டம் - 10 கிராம்
செய்முறை
வெண்துளசியைப் பச்சையாக எடுத்து அரைத்துக் குறிப்பிட்டுள்ள எடை எடுத்துக் கொள்ளவும். கருந்துளசியையும் முன் போல் செய்து கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்துச் சலித்துக் கொள்ளவும். அதிமதுரத்தை நன்றாக இடித்து மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் நன்றாக இடித்து வடிகட்டிக் கொள்ளவும். சீரகத்தைத் தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும், ஒரு மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து வடிகட்டவும். கோஷ்டத்தை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு 100 மி.லி. பசும்பால் ஊற்றி மூடவும். 1 மணி நேரம் மூடி வைத்திருந்து எடுக்கவும். நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் இடித்து வடிகட்டவும்.
அரைத்துள்ள வெண் துளசி, கருந் துளசியையும் கல்வத்தில் வைத்துச் சேர்த்து அரைத்து மற்ற சரக்குகளையும் ஒவ்வொன்றாகப் போட்டு அரைக்கவும். அரைக்கும்போது மிளகுக் கஷாயம் அல்லது வெந்நீரைச் சிறுகச் சிறுக விட்டு அரைக்கவும். சரக்குகள் எல்லாவற்றையும் போட்டு அரைத்ததும், கஷாயம் அல்லது வெந்நீர் விடுவதை நிறுத்தி விடவும். சாந்து பதமாக - உருட்டுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை ஒரு பெரிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். இரண்டு மிளகு அளவு உருட்டி மண் தட்டில் போட்டு நிழலில் உலர்த்தவும். ஒரு மாத்திரையை உடைத்துப் பார்த்து காய்ந்தது அறிந்து பத்திரப் படுத்தவும்.
பயன்படுத்தும் முறை
காலை 6 மணிக்கு 1 மாத்திரை வெந்நீருடன், பகல் 12 மணிக்கு 1 மாத்திரை வெந்நீருடன், மாலை 6 மணிக்கு 1 மாத்திரை வெந்நீருடன், 3 நாட்களுக்கு.
குறிப்பு - 1
குளிர்ந்த பானங்கள், தயிர், இளநீர், தண்ணீர்க் குளியலையும் கண்டிப்பாக நீக்கவும்.
குறிப்பு - 2
குழந்தைகளுக்கு 1/2 மாத்திரை கணக்கில் 3 வேளைகள் கொடுக்கவும், 3 நாட்களுக்கு.