• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 2, 2011

    உடல் பருமனும் முக்கால் வயிறு உணவும்

    Health Tips for Obesity - Food Habits and Nutrition Guide in Tamil நமக்கு வேலை செய்யும் திறனுக்கு ஏற்றார் போல் குறிப்பிட்ட அளவு கலோரிகள் உடலுக்குத் தேவை. அவை அதிகரித்தால் அந்தச் சக்தி கொழுப்புத் திசுக்களாக அடிபோஸ் தசையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது நமது வயிற்றின் முன் பகுதி, புட்டம், மார்பகம் முதலிய இடங்களில் சேமிக்கப்படுகிறது.
    நமது உணவுப்பழக்கங்களில் சிறு மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கூட்டு உணவுப் பழக்கம் அதாவது, குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடும் முறை குறைந்து, குழந்தைகள் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது. இதனால் நெடுநேரம் உண்ணும் உணவின் அளவு தெரியாமலேயே உண்கிறார்கள். இன்று பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சி வகுப்புகளும் குறைந்துவிட்டன. பெரும்பாலான கல்விக்கூடங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லை.
    வேலைத் திறனுக்குத் தகுந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலையைச் செய்து வரும் வியாபாரிகளும் பருமனாக வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு சரியான உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் தாய்மார்களுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத் தவிர மன அழுத்தம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்க நினைத்து சாப்பிடுவதில் சுகம் காணுகிறார்கள். மரபு வழியாக உடல் பருமனாவது உண்டு. சில சமயம் நாளமில்லாச் சுரப்பிகளில் இருந்து வரும் இயக்குநீர் அதிகரிப்பதாலோ, குறைவதாலோ இது ஏற்படலாம்.
    உடல் பருமன் உள்ளவர்கள் உணவைக் குறைக்க வேண்டும். அதிக ஓய்வை அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையைத் தவிர்க்க வேண்டும். தினசரி உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். காலையிலோ மாலையிலோ நடக்க வேண்டும். பகல் தூக்கம் அதிக அளவில் இருக்கக்கூடாது.
    உடல் பருமனைக் குறைக்காவிட்டால் நடப்பதில் சிரமம் ஏற்படலாம். விளையாட்டுகளில் பங்குபெற முடியாது. இவர்கள் சீக்கிரம் களைத்துவிடுவர். சிறிது தூரம் நடந்தாலே மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கும். நீரிழிவு, இரத்த அழுத்தப் பாதிப்பு, அதிரோஸ்கிலிரோசிஸ், வெரிகோஸ் சிரைகள் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம். தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படலாம். இவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதில் சில கஷ்டங்களும் ஏற்படும்.
    உட்கார்ந்து வேலை செய்பவர்களில் பெரும்பாலோருக்கு உடல் பருமனாக வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம் ஜரிபுட், துரித உணவு ஆகியவை கிடையாது. தற்பொழுது பெரியவர்களும், குழந்தைகளும் இவற்றை அதிகமாக உண்ணுகிறார்கள். கொழுப்புச் சத்து சுவையை ஊட்டுவதால் பலரும் தேவையான கலோரியைத் தாண்டி உண்கிறோம்.
    உடல் நலம் ஒரு செல்வம் என்று சொல்வார்கள். முக்கால் வயிறு உணவே சிறந்தது.