கணணி இயங்கும் வீடுகளில் மின்சார பில் எகிறுகின்றன. சிலர் காலையில் பாட்டு கேட்கக் கூட கணணியை ஆன் செய்துவிடுவார்கள்.அது நாள் முழுக்க பாடிக்கொண்டிருக்கும். இதைத் தவிர்க்க எத்தனையோ பேட்டரி வானொலிகள் வந்துவிட்டன.
அவற்றைப் பயன்படுத்தலாம். மேலும் அரை மணி நேரத்திற்கு அதிகமாக கணணியை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிந்தால் கணணியை ஷட் அவுன் செய்து விடுவது நல்லது.
அதே சமயம் கால் மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் அணைத்துவிட்டுச் செல்வது தேவையற்றது. கணிணியை பயன்படுத்தாத சமயத்தில் கம்ப்யூட்டர் தானாகவே ஸ்லீப் மோடுக்குச் செல்லும்படி மாற்றி வைக்கலாம்.
ஸ்க்ரீன் சேவரை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம் இது எலக்ட்ரிக் பில்லை எகிரச் செய்யுமே தவிர குறைக்காது. |