![](http://new.vikatan.com/doctor/2011/02/15/images/ipod.jpg)
இதுகுறித்து லிவர்பூலின் எயின்ட்ரீ பல்கலைக்கழக மருத்துவமனையின் பேச்சு மற்றும் செவித்திறன் சார்ந்த மருத்துவத்தின் மூத்த நிபுணரான டாக்டர் டோனி கே அளித்துள்ள பேட்டி ஒன்றில், "எங்களிடம் பரிசோதனைக்காக வருகின்ற இளம் இசைப் பிரியர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஐபாடுக்கு அடிமையாவதால் இளைஞர்களின் காதுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவது கவலைக்குரிய விஷயம். குறிப்பாக, பிரிட்டன் இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது.
இசையுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கின்ற நாம், செவித்திறனை பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வு இன்றி செயல்படுவதே பிரச்னைகளுக்கு வித்திடுகிறது.
இசையை சரியான ஒலியுடன் கேட்பதால் எவ்விதப் பிரச்னையும் இல்லை. ஆனால், கடந்த 20 ஆண்டு காலமாக சவுண்டை அதிகமாக வைத்துக் கேட்கும் பழக்கம் இளைஞர்களிடம் மலிந்துவிட்டது.
குறைந்த வால்யூம் வைத்து இசையை ரசிப்பது ஒன்றுதான் இதற்குத் தீர்வு. மாறாக, அதிக வால்யூமுடன் இசையில் கலக்கிறோம் என்ற பெயரில் வாழ்நாளின் பிற்பகுதியில் செவித்திறனை முற்றிலும் இழந்திடக் கூடாது," என்கிறார் மருத்துவர் டோனி கே.