கொள்ளு (காணப்பயறு) சூப் அருமையான மருந்து.
கொள்ளு சூப் தயாரிக்கும் முறை
கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
பூண்டு - அரை தேக்கரண்டி
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை - சிறிது
கருவேப்பிலை - சிறிது
இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 4 கப் தண்ணீரில் கரைத்து, 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும். இதன் தண்டை சாறு எடுத்து ரசம் வைத்துச் சாப்பிட்டால் சளி கரைந்து குணமாகும்.
மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
வெங்காயம் சளியை முறிக்கும். பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் சி இருக்கிறது. வைட்டமின் சி ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.
துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.